சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது .
தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். தற்போது இவர் ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ராஜவம்சம் படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, தம்பி ராமையா, யோகி பாபு, கும்கி அஸ்வின், சாம்ஸ், மனோபாலா, சிங்கம் புலி, விஜயகுமார், ஆடம்ஸ், நிரோஷா உள்பட 49 நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளனர். செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ராஜவம்சம் திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் ராஜவம்சம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுதபூஜை பண்டிகையன்று இந்த படம் ரிலீஸாக உள்ளது . மேலும் அதே தினத்தில் தான் எனிமி, அரண்மனை-3 ஆகிய படங்களும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.