நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
தெய்வத்தின் பரிபூரண அருள் கொண்ட மேஷராசி அன்பர்களே..!! இன்று முக்கியமான செயல் நிறைவேறுவதற்கு கொஞ்சம் கால தாமதம் பிடிக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனைகள் புதிய வழிகாட்டுதலை கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பை பின்பற்றவும். இன்று தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளருக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் கொஞ்சம் தலை தூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலைப்பளுவால் உடல் சோர்வடைய கூடும். உடல் ஆரோக்கியத்தை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செயலில் காட்டுவார்கள்.
அதை நீங்கள் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் எந்தவிதமான வாக்குவாதங்களும் வேண்டாம். பொறுமையாக இருங்கள். இன்று புத்தாடை வாங்குவதற்கான சூழல் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய கூடும். வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது வெள்ளை நிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும். அதுபோலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் 18 சித்தர்கள் உள்ள படத்தை வணங்கி வருவது மிகவும் சிறப்பு. இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
ரிஷபம் :
அனைவரையும் எளிதில் கவரக்கூடிய ரிஷபராசி அன்பர்களே..!! இன்று மனதில் நம்பிக்கையும் பெருமிதமும் உண்டாகும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். நிலுவைப்பணம் வசூலாகும். போட்டி பந்தயத்தில் வெற்றி பெறுவதற்கு அனுகூலம் உண்டாகும். நண்பர்களுடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இன்று பயணங்கள் சாதகமான பலனை கொடுப்பதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடப்பதற்கு கொஞ்சம் கடுமையாகவே இன்று உழைப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.
எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து மன மகிழ்ச்சி அடைவார்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியரின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும்பொழுது நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே 18 சித்தர்கள் கொண்ட படத்தை வழிபடுவது நல்லது. இன்று சித்தர்கள் வழிபட்டால் இன்றைய நாள் உங்களுக்கு அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஊதா நிறம்
மிதுனம் :
எப்பொழுதுமே மற்றவர்களை கலகலப்பாக வைத்துக் கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே..!! இன்று நண்பர் உங்களை பெருமைப்படுத்துவார். ஆன்மீக உரையாடலில் கலந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வாழ்வில் நம்பிக்கை வளரும். நிலுவைப்பணம் வசூலாகும். இன்று தேவையில்லாத விவகாரத்தில் மட்டும் தலையிட வேண்டாம். அந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலனை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். இன்று மருத்துவம் சார்ந்த செலவுகள் கொஞ்சம் வரக்கூடும். அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். அதாவது வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஆயுதங்களை கையாளும் பொழுது வாகனத்தை ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையாக ஓட்ட வேண்டும். அடுத்தவருக்கு உதவ போய் வீண்பழி கொஞ்சம் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்களைச் சார்ந்தவர்கள் உங்களை தவறாக நினைக்கலாம். அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று வரும் வாய்ப்புக்கள் இருக்கும். இன்று மன மகிழ்ச்சியும் கலகலப்பும் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டும். பாடங்களில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது பச்சை நிற ஆடையோ அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் 18-சித்தர்கள் உள்ள படத்தை வணங்கி இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து விஷயங்களுமே சிறப்பாக இருக்கும். மனமும் மகிழ்ச்சியாகவே காணப்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்
கடகம் :
துணிச்சலுக்கு பெயர் போன கடக ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் அதிகமான எதிர்பார்ப்பு உருவாகும். தொழில் வியாபாரம் மந்த கதியில்தான் இயங்கும். அளவான பணவரவு இன்று கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாறுதல்கள் ஏற்படக்கூடும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மையை கொடுக்கும். வியாபார பணத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக பணிச் சுமையை ஏற்க வேண்டியிருக்கும் மேலதிகாரியிடம் உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கும் போது கவனமாக பேசுவது நல்லது.
பணி நிமிர்த்தமாக பயணங்களும் செல்லலாம். அதனால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். லாபத்திற்கு எந்தவித குறையும் ஏற்படாது. இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். மாணவரிடம் பழகும் போது கொஞ்சம் கவனமாக பழகுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் 18-சித்தர்கள் உள்ள படத்தை வழிபடுவது மிகவும் நல்லது. சித்தர்கள் வழிபாடு இன்று உங்களுக்கு நன்மை செய்யக் கூடியதாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்
சிம்மம் :
அனைவரையும் எளிதில் கவரக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்யக்கூடும். உண்மை நேர்மை தகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகிற குறைகளை சரிசெய்ய அதிகமாக பணிபுரிய நேரிடும். பணச் செலவில் சிக்கனம் வேண்டும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று குடும்பத்தில் நிம்மதி கொஞ்சம் குறையும். நீங்கள் பேசும் பொழுது பார்த்துப் பேசுங்கள். கணவன் மனைவிக்கிடையே கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று உறவினர்களின் வருகை இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கையும் உண்டாகும்.
குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்பொழுது வார்த்தைகளை கோர்த்து பேசுவது மிகவும் முக்கியம். புதிய வேலைக்கான முயற்ச்சிகளில் சாதகமான போக்கு காணப்படும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து சேரும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய கூடும். கல்வியில் ஆர்வம் மிகுதியாக காணப்படும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே 18-சித்தர்கள் உருவம் கொண்ட ஒரு சேர புகைப்படத்தை மனதார வழிபட்டு வாருங்கள். இன்று சித்தர்கள் வழிபாடு உங்களுக்கு மிக சிறந்ததாக இருக்கும். நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்
கன்னி :
குடும்ப நலனுக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் கன்னிராசி அன்பர்களே.!! இன்று உங்கள் நண்பரிடம் சொந்த விஷயத்தைப் பற்றி பேசுவீர்கள். இதனால் கொஞ்சம் மனம் நிம்மதி அடைவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அனுகூல காரணி பலம்பெரும். உபரி பண வருமானத்தில் வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். அதனால் நன்மையும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் அறிவுத்திறன் கூடும். ஆனால் அவர்களது உடல் நலத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். முயற்சிகள் நல்ல பலனைக் கொடுக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். மேலதிகாரிகளின் உதவிகளும் ஆலோசனையும் உங்களை நல்வழிப்படுத்தும். இன்று உத்தியோகத்தில் உழைப்பு கூடும். லாபம் சிறப்பாகவே இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியரின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது பச்சை நிற ஆடையோ அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே பதினெட்டு சித்தர்கள் ஒருசேர உள்ள புகைப்படத்தை வணங்கி வருவது மிகவும் சிறப்பு. சித்தர்கள் வழிபாடு இன்று உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்
துலாம் :
தனது கடுமையான முயற்சியால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய கூடிய துலாம் ராசி அன்பர்களே..!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் புது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட தன்மை இருக்கும். சேமிப்பு பணம் குடும்பத்தில் முக்கியமான தேவைகளுக்கு பயன்படும். போக்குவரத்தில் கவனங்களை பின்பற்றுவது நல்லது. இன்று கணவன் மனைவிக்கு இடையே இணக்கமான போக்கு காண்பது கொஞ்சம் சிரமம் தான். எதையும் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். வீண் கவலைகள் எதிர்பாராத வளர்ச்சிகள் கொஞ்சம் ஏற்படக்கூடும். எதையும் திட்டமிட்டுச் செய்வது நன்மையை கொடுக்கும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்டிருந்த வாகனம், சொத்து போன்றவைகள் வாங்க கூடும்.
வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று வாகன யோகம் நல்ல படியாக இருக்கும். முடிந்தால் வாகனத்தில் நீங்கள் முதலீடு செய்வதும் நல்லது. இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடும். மாணவர்கள் இன்று மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து சென்றால் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே 18-சித்தர்கள் கொண்ட ஒரு சேர படத்தை வழங்குவது மிகவும் நல்லது. அதாவது சித்தர்கள் வழிபாடு இன்று உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
விருச்சிகம் :
உங்களின் வித்தியாசமான அணுகு முறையால் அனைவரையும் எளிதாக ஈர்க்கக்கூடிய விருச்சிகராசி அன்பர்களே..!! இன்று தாயின் அன்பு ஆசி பலமாகவே இருக்கும். பணிகளை திறம்பட நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். ஆதாய பண வரவை உரிய சேமிப்பாக மாற்றுவீர்கள். இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இன்று கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். உறவினருடன் அனுசரித்து செல்வதும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாகவே உழைக்க வேண்டி இருக்கும்.
சக ஊழியரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் உழைப்பது அவசியம். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். ஆசிரியரின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது நீல நிற ஆடையோ அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் 18-சித்தர்கள் கொண்ட ஒரு சேர புகைப்படத்தை பார்த்து வணங்கி வருவது சிறப்பு. இன்று உங்களுக்கு சித்தர் வழிபாடு மிகவும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்
தனுசு :
தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லும் தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அடுத்தவர் மீதான நம்பிக்கை உங்களுக்கு குறையும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். சராசரி பணவரவு கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் இருக்கட்டும். தாயின் அன்பு, ஆசி மனதிற்கு ஆறுதலை கொடுக்கும். இன்று வீண் செலவுகள் கொஞ்சம் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டியிருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வழியே சென்று உதவிகளை செய்வதை மிகவும் தவிர்ப்பது நல்லது. விருப்பமில்லாத இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். முக்கியமாக மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு இன்று நீங்கள் பஞ்சாயத்துகள் ஏதும் செய்ய வேண்டாம் .நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது மிகவும் சிறப்பு பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
புதிய நபர்களின் வருகையும் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் பால்ய நண்பர்களை சந்தித்து மகிழக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். அது போலவே படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள்.இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும்பொழுது வெள்ளை நிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் பதினெட்டு சித்தர்கள் இருக்கும் ஒருசேர படத்தை வணங்கி வருவது நல்லது. சித்தர்கள் வழிபாடு இன்று உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
மகரம் :
மனிதநேயமிக்க மகரராசி அன்பர்களே…!! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும் நேர்த்தியாகச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். தாராள அளவில் பண வரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். அது போதும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மன சங்கடத்துக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்கள் தேவை அறிந்து பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.
இன்று மனத்தெளிவு ஏற்படும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடையக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் தயவு செய்து நடந்துகொள்ளுங்கள். சக மாணவருடன் ஒற்றுமையுடன் பழகுங்கள். வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியைச் செய்யும்போது முக்கியமாக காரியத்திற்கு செல்லும் போது மஞ்சள் நிற ஆடையோ அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் இன்று 18-சித்தர்கள் உள்ள ஒரு சேர படத்தை வணங்குங்கள். மிகவும் வெற்றி பெறும் வாய்ப்புகள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று சித்தர்கள் வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்
கும்பம் :
கஷ்டத்தை தன்னுள்ளே வைத்துக்கொண்டு வெளியே சிரித்து கொண்டிருக்கும் கும்பராசி அன்பர்களே..!! இன்று உங்களிடம் பலரும் நல்ல எண்ணம் கொள்வார்கள். உற்சாக மனதுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நடைபெறும். கூடுதல் பணவரவும் கிடைக்கும்.. உறவினர் வீட்டில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே வெளியே சொல்ல முடியாத மனக்குறைகள் வரக்கூடும். பிள்ளைகள் கல்வி மற்றும் அவர்கள் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடும். வீண் மன சங்கடத்துக்கு ஆளாக நேரிடும். எதிலும் கவனம் இருக்கட்டும். பெண்களுக்கு திருமண பாக்கியம் கை கூடி வரும். இன்று நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் இன்று கிடைக்கும். இன்றைய நாள் நீங்கள் மனம் மகிழும் நாளாகவே இருக்கும். தெய்வீக அருளை முழுமையாகப் பெற்று ஆனந்தம் கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே நீங்கள் 18-சித்தர்கள் கொண்ட ஒரு சேர புகைப்படத்தை வணங்கி வருவது நல்லது. இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
மீனம் :
மற்றவர்களின் துன்பத்தை தன் துன்பம் ஆக எடுத்துக் கொள்ளும் மீனராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்களில் கவனச் சிதறல்கள் ஏற்படக்கூடும். தொழில் வியாபாரம் சிறக்க கூடுதல் உழைப்பு மட்டுமே உதவும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். புத்திரரின் நல்ல செயல் மனதில் மகிழ்ச்சியை கொடுக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம். இன்று குறிக்கோளற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல் உடல் நலக்கேடு போன்றவை ஏற்படும். எனவே நீங்கள் எதையும் திட்டமிட்டு செய்வது மிகவும் நல்லது. மனதில் கவலை உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுபச்செலவுகள் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் ஓரளவு முன்னேற்றம் பெற முடியும். இன்று கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். கல்வியில் ஆர்வத்தை செலுத்துங்கள். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு கல்வியில் இப்போது கவனத்தை செலுத்துவது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் இன்று பதினெட்டு சித்தர்கள் ஒன்று சேர உள்ள புகைப்படத்தை வழிபடுவது நல்லது. இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாக இருக்கும். இன்று சித்தர்களின் வழிபாடு உங்களை நல்வழிப்படுத்தும். வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றி அமைத்துக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்