கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் முறைகேட்டை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 சவரன் நகை கடன் மட்டுமின்றி 100% பொது நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சார்பதிவாளர், சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது.
சென்னை மண்டலத்தில் துணை பதிவாளர்களை கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து நவம்பர் 20க்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.