தமிழக முதல்வர் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு வார்த்தை போர் நீடிக்கின்றது. பழனிவேல் தியாகராஜன் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக முதல்வர், மு.க. ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் இல்லை என்பது, தியாகராஜன் பேச்சில் தெரிகிறது. நான் ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசியிருக்கிறேன். என் பேச்சுக்களை அவரை, படிக்கச் சொல்லுங்கள்.
இன்னும் ஒரு மாதத்தில், GST குறித்து ஒரு புத்தகத்தை தயாரித்து கொடுக்கிறேன். நான் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று குறை கூறுகிறார். அந்த சமயத்தில் நான், தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில், கடந்த 2017-ஆம் வருடம், மார்ச் 16-ஆம் தேதி, அன்று தாக்கல் செய்தேன். இதனை விட்டுவிட்டு அங்கு சென்று GST பற்றி நான் பேச முடியுமா? இது தெரியாமல், அதை குற்றச்சாட்டாக முன்வைக்கிறார் என்று கூறியிருக்கிறார்.