Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Big Breaking: 6மணி நேரத்தில்…. 10,00,000பேருக்கு தடுப்பூசி…. கலக்கும் தமிழக தடுப்பூசி முகாம் …!!

தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில்  6 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

தமிழகம் முழுவதும் இன்று 3-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 6 மணிநேரத்தில் மட்டும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் மூன்றாவது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் முனைப்புடன் ஏற்கனவே கடந்த 12ஆம் தேதி முதல் கட்ட தடுப்பூசி முகாமில் 28  லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2வது கட்ட தடுப்பூசி முகாம் கடந்த 19ம் தேதி நடத்தப்பட்டது. அதில் 16 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந் நிலையில் இன்று தமிழகத்தில் மூன்றாவது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆறு மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |