Categories
உலக செய்திகள்

மூடப்பட்ட இசை பயிற்சி மையங்கள்…. தலீபான்களின் கட்டுப்பாடு…. அவதிப்படும் இசைக்கலைஞர்கள்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களின் ஆட்சி முறையால் இசைப் பயிற்சி மையங்கள் மூடப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கன் கைபற்றிய பின்னர் அங்கு  இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெண்களுக்கு ஆரம்பத்தில் அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர். இருப்பினும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் இருபாலரும் சேர்ந்து படிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும்  பெண்கள் இணைந்து படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சியில் பெண்கள்  பணியாற்றவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஈரானிய மற்றும்  இந்திய பாரம்பரிய இசையின் தாக்கம் இருப்பதால் அங்கு  ஒரு வலுவான இசை பாரம்பரியம் உள்ளது என அறியப்படுகிறது.மேலும்  ஆப்கானிஸ்தானில் பாப் இசை, மின்னணு உபகரணங்கள் உதவியுடன் கொண்ட  இசை போன்ற நிகழ்ச்சிகள் கடந்த 20 வருடங்களாக நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் கடந்த  1996-2001ல் தலீபான்கள் ஆப்கனை ஆட்சி புரிந்த சமயத்தில் இந்நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளனர். மேலும் தற்போது இந்த தடையை  தலீபான்கள் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கவில்லை என்றாலும்  இசைக்கலைஞர்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஏனென்றால் தலிபான்கள் சில இடங்களில் இசைக்கலைஞர்களை தொடர்ந்து துன்புறுத்தியும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களை தடை செய்தும் கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள்  வெளியாகி உள்ளது. ஆகையால் திருமண மண்டபங்களிலும் இசை நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுக்கின்றனர். மேலும் தலிபான்கன்  ஒரு சோதனை சாவடியில் இசைக் கலைஞர் ஒருவரின் இசைக்கருவியை உடைத்து நொறுக்கியதாக தெரியவந்தது. அதனால் சோதனைச் சாவடியை கடக்கும்போது ஓட்டுனர்கள்  வாகனத்தில் உள்ள வானொலியை  அணைத்து விடுகின்றனர்.

இதனையடுத்து காபூல் மாகாணத்தில்  பழை என்ற நகரத்தின் அருகில் இருக்கும் கராபட் என்ற பகுதியில் பல குடும்பத்தினர் இசை நிகழ்ச்சிகள் நடத்தி தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். அவர்கள் தற்போது நாட்டைவிட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது பற்றி முஷாஃபர் பக்ஷ் என்ற பேண்ட் இசைக்கலைஞர்கள் கூறியதாவது “தற்போது தங்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களுக்கு சொந்தமான இசைக்கருவிகளை சந்தையிலேயே சிலவற்றை விற்றுவிட்டோம்” என்று கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளுக்கு தலீபான் அரசு மீண்டும் தடை விதிக்குமா என்கிற கேள்வியை  அசோசியேட் பிரஸ் என்ற  செய்தி  நிறுவனம் தலீபான்களின் செய்தி தொடர்பாளரான  பிலால் கரிமியிடம் கேட்டுள்ளது. அதற்கு அவர் கூறியதாவது “இதை பற்றி பரிசீலனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதி முடிவு எடுக்கப்பட்டதும்  இஸ்லாமிய அமீரக அரசு தெரிவிக்கும்” என்று கூறியுள்ளார். இதனால் தலீபான்களின் இந்த நடவடிக்கையால் இசை நிகழ்ச்சி, இசை நடனம்  வழக்கமாக நடைபெறும் திருமண மண்டபங்கள் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் இசைக்கலைஞர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளிநாடு செல்வதற்காக விசா  விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் கரூர் நகரைச் சேர்ந்த ட்ரம் இசைக்கலைஞர் ஒருவர் “இந்நாட்டில் இசைக்கலைஞர்கள் இனி வசிக்க முடியாது. கடந்த காலங்களில் இருந்த இசை மீதான அன்பும், ஈர்ப்பும்  மக்களுக்கு குறைந்துவிட்டது” என்று கூறியுள்ளார். குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய இசை பயிற்சி நிறுவனத்தில்  பணியாற்றும் ஆசிரியர்களும் அங்கு படிக்கும் மாணவர்களும் பயிற்சி நிறுவனத்திற்கு வருவதில்லை. மேலும் இசை பயிற்சி நிறுவனங்களிலும் தலீபான் படையினர் பாதுகாப்புக்கு  நிற்கின்றனர். எனவே ஆப்கானிஸ்தான் தனது புதிய முகத்தை காட்ட தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |