அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சவப்பெட்டிகள் காணாமல்போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் ஜடா புயல் தாக்கியது. இதனால் அம்மாகாணத்தில் உள்ள சவப்பெட்டிகள் அனைத்தும் நான்கு வாரங்களாக நகரம் முழுவதும் காணப்படுவதாக தகவல் வெளியாகியது. அதாவது, ஆகஸ்ட் மாதத்தில் வீசிய புயலால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கில் சவப்பெட்டிகள் இடுகாட்டில் இருந்து அடித்து செல்லப்பட்டுள்ளன. மேலும் பலர் தங்கள் உறவினர்களின் சவப்பெட்டிகளை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து மீட்பு பணிக்குழுவை சேர்ந்தவர்களும் காணாமல் போன சவப் பெட்டிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து ஒருவர் கூறியதில் ” எனது தாயார், சகோதரி உள்ளிட்ட மூவரின் சவப்பெட்டிகளை இன்னும் நான் தேடி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக சுமார் 30 முதல் 50 சவப்பெட்டிகள் இடுகாட்டில் இருந்து பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் பாதிரியார் ஒருவர் கூறியுள்ளார்.