தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் முறைகேடு தொடர்பாக வங்கிகளில் பெறப்பட்ட 100% பொது நகைகளையும் ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சார்பதிவாளர், கூட்டுறவு வங்கியின் சரக்கு மேற்பார்வையாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து நவம்பர் 21-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.