சிரியாவில் நடைபெற்ற போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது.
சிரியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் போரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஐக்கிய நாட்டு சபை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 3, 50,750 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதையும் விட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக இருக்கலாம் என்று மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பிரித்தானியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்று நடத்திய ஆய்வில் சிரியாவில் மொத்தம் 6,06,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதிலும் கடந்த 2015 ஆம் ஆண்டு சிரியாவில் போரானது தீவிரமானது. அந்த சமயத்தில் ஆயுதமேந்திய அமைப்பினர் நாட்டின் பெரும் பகுதியை தங்கள் வசமாக்கினர். அப்பொழுது ரஷ்யா ராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையால் சிரியா ராணுவம் தலை தூக்கியது. மேலும் சிரியாவின் அதிபரான ஆசாத்தின் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு முதல்முறையாக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கவே சிரியா ராணுவம் ரஷ்யாவின் துணையுடன் ஒடுக்குமுறைகளை செயல்படுத்தியது. இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இறந்தவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்வதை நிறுத்திக் கொண்டது. தற்பொழுது போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கழித்து ஐக்கிய நாடுகள் சபை சிரியா போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.