கேரள பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட மாட்டாது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளி கல்லூரிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் நவம்பர் 1ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பிரனாய் விஜயன் அறிவித்துள்ளார்.
இதையடுத்து பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டிய சில நடைமுறைகள் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கேரளா பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட மாட்டாது எனவும், அதற்கு பதிலாக அதற்குரிய தொகை வழங்கப்படும் எனவும் கேரள கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் ஒரு பெஞ்சில் இரண்டு மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும் எனவும், பள்ளிகளுக்கு முன்பு அமைந்துள்ள கடைகளில் மதிய உணவு சாப்பிட அனுமதி இல்லை எனவும், மேலும் மாணவர்கள் நோய் அறிகுறியுடன் காணப்பட்டால் பள்ளிக்கு வர தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.