அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம், ‘எச்-1பி’ விசா எளிதாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் ‘எச்-1பி’ விசாவானது, அங்குள்ள நிறுவனங்களில் தங்கி பணியாற்றுவதற்காக இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த விசாக்களை நம்பிதான் செயல்பட்டு வருகின்றன. இந்த விசா நடைமுறைகளில் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபொழுது பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருந்தார்.
இதனால் ‘எச்-1பி’ விசா கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை, பிரதமர் மோடி சந்தித்த போது ‘எச்-1பி’ விசாவானது எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இந்தத் தகவலை வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்த்தன், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.