சொத்து பிரச்சனையில் மாட்டுக்கு விஷம் வைத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கள்ளிக்குடி அருகே மருதம்குடியில் கூலித் தொழிலாளியான மருதப்பன் வசித்து வருகிறார். இவருக்கு மருதி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மருதி தன் தாத்தாவின் சொத்தில் தன்னுடைய பங்கினை தருமாறு தந்தையிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவரின் தந்தை சொத்தை தர மறுத்துவிட்டார். இந்நிலையில் மாலை நேரத்தில் மருதி தனது மாட்டுக்கு குடிப்பதற்கு நீரை வைத்தார்.
இதில் மருதப்பன் விஷத்தை கலந்ததாக கூறப்பட்டது. இதனை அறிந்த உடனே மாட்டை நீரை குடிக்க விடாமல் மருதி காப்பாற்றியுள்ளார். இதுபற்றி கள்ளிக்குடி காவல் நிலையத்தில் மருதி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் மருதப்பனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.