Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் வானிலை

#BREAKING: மிரட்டும் ”குலாப்” புயல் – பிரதமர் மோடி ஆலோசனை …!!

”குலாப் புயல்” இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் நிலையில் பிரதமர் மோடி ஆந்திர முதல்வரோடு ஆலோசனை நடத்தினார்.

கடந்த 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருமாறியது. இந்நிலையில் 19 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வரும் ”குலாப்” புயல் ஒடிஷா மாநிலம்  கோபால்பூருக்கு கிழக்கு தென்கிழக்கு திசைகளில் 270 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திராவின் கலிங்கப்பட்டினமிடையே இருந்து 330 கிலோமீட்டர் கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது.

இந்த புயல்  கோபால்பூருக்கும்  – கலிங்கப்பட்டினதிற்கும் இடையே நள்ளிரவு கரையை கடக்கும் என்றும், அப்போது 75 கிலோ மீட்டர் முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சில நேரங்களில் 95 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாநில அரசு எடுத்து வரும் நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியோடு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர்.

Categories

Tech |