இன்று சக்தி வாய்ந்த காந்த புயல் ஒன்று பூமியை தாக்க உள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் எச்சரித்துள்ளது. புவி காந்தப் புயல் என்பது பூமியின் காந்த மண்டலத்தில் இடையூறை ஏற்படுத்துகிறது. சூரிய காட்டிலிருந்து ஏற்படும் ஆற்றல் பரிமாற்றத்திற்கு பிறகு பூமியை சுற்றி உள்ள விண்வெளி சூழலில் இந்த புவி காந்தப் புயல் உருவாகிறது. இந்த புவி காந்தப் புயலின் தாக்கம் முதன்மையாக 60 டிகிரி புவிக் காந்த அட்சரேகையில் துருவத்தில் இருக்கும்.
எனவே இது பவர்கிரிட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி செயற்கைக்கோளை பாதிக்கும் இந்தப் புயலால் செயற்கைக்கோள், மின்சார கோபுரங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படும். அதனால் பூமியில் பல்வேறு இடங்களில் செல்போன் மற்றும் டிவி உள்ளிட்டவை சில மணி நேரங்கள் ஏற்காமல் போகலாம் என கூறப்பட்டுள்ளது