மத்திய பிரதேசத்தில் பெண் போலிசை விருந்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாக கற்பழித்த காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் 30 வயதான பெண் போலீஸ் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு ஃபேஸ்புக் மூலம் ஆண் நண்பர் ஒருவர் அறிமுகமானார். இருவரும் நீண்ட காலமாக பேஸ்புக்கில் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆண் நண்பர் தனது சகோதரனுக்கு பிறந்தநாள் என்று பெண் போலீசுக்கு அழைப்பு கொடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்ற பெண் போலீஸ் விருந்துக்கு சென்று உள்ளார்
விருந்து முடிந்த அன்று இரவு பெண் போலீசை அவரது ஆண் நண்பர் அவருடைய சகோதரர் மற்றும் இரண்டு பேர் என மொத்தமாக நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் இதனை அந்த வாலிபரின் தாய் வீடியோ எடுத்துள்ளதாக தெரிகிறது. பின்னர் அந்த ஆபாச வீடியோவை காட்டி பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி பெண் போலீஸ் புகார் அளித்ததின் பேரில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.