தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் மெகா முகாமில் இலக்கை விஞ்சி 18.14 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கூடுதலாகவே 28,91,21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.. இரண்டாவதாக செப்டம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்ட முகாமில் 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் இலக்கை விடவும் கூடுதலாக 16,43,879 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஞாயிறு) தமிழகம் முழுவதும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.. இந்த மெகா முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.. 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்று வரும் இந்த மெகா முகாமில் 15 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், 4 மணியளவில் இலக்கை விஞ்சி 18.14 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை தகவல் தெரிவித்துள்ளது.. 7 மணி வரை இந்த முகாம் செயல்படுவதால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மதியம் 2 : 15 மணிக்கே 15.4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இலக்கு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.