Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உலா வந்த காட்டு யானைகள்…. பீதியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி….!!

சுற்றுலா இடங்களில் உலா வந்த 3 காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். அவர்கள் நகரையொட்டி உள்ள வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட இடங்களை கண்டு ரசிக்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் கடந்த சில நாட்களாக 3 காட்டு யானைகள் குட்டியுடன் உலா வருகின்றன.

இதனால் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் இடம்பெயரத் தொடங்கிய நிலையில் பேரிஜம் ஏரிக்கு செல்லும் தர்கா பகுதியில் யானைகள் முகாமிட்டிருந்தது. இதனால் காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, சுற்றுலா இடங்களில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் மோயர் பாயிண்ட் பகுதியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் இடம் பெயர்ந்துள்ளன.

இதனை வனத்துறை ஊழியர்கள் கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவை வனப்பகுதியை நோக்கி சென்று விட்டதால் சுற்றுலா இடங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக சுற்றுலா இடங்களில் காட்டு யானைகள் உலா வந்ததால் பொது மக்கள் பீதியுடன் நடமாடி வந்தனர். தற்போது வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் சென்று விட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |