தெய்வத்தின் பரிபூரண அருள் கொண்ட மேஷராசி அன்பர்களே..!! இன்று முக்கியமான செயல் நிறைவேறுவதற்கு கொஞ்சம் கால தாமதம் பிடிக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனைகள் புதிய வழிகாட்டுதலை கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பை பின்பற்றவும். இன்று தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளருக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் கொஞ்சம் தலை தூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலைப்பளுவால் உடல் சோர்வடைய கூடும். உடல் ஆரோக்கியத்தை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செயலில் காட்டுவார்கள். அதை நீங்கள் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் எந்தவிதமான வாக்குவாதங்களும் வேண்டாம். பொறுமையாக இருங்கள். இன்று புத்தாடை வாங்குவதற்கான சூழல் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய கூடும். வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது வெள்ளை நிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும். அதுபோலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் 18 சித்தர்கள் உள்ள படத்தை வணங்கி வருவது மிகவும் சிறப்பு. இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்