Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. பொதுமக்கள் போராட்டம்…. போலிஸ் பேச்சுவார்த்தை….!!

தொடர்ந்து பெய்த கனமழையால் கழிவு நீருடன் சேர்ந்து மழைநீரும் வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில் கோணாமேடு உள்பட மூன்று பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து தெருக்களில் ஆறாக ஓடி உள்ளது. இதனால் அப்பகுதிகளில் இருக்கும் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீருடன் கலந்து வீட்டிற்குள் புகுந்ததால் பொது மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின் கழுவி நீர் கால்வாய் அடைப்புகளை சரி செய்து தருமாறு பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பொதுமக்கள் சாலையில் வாகனங்களை மறித்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்களிடம் தங்களின் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரியிடம் பேசுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |