எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல் ஒரு திட்டமிட்டு சதி என போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் போக்குவரத்துதுறை பிரித்தானியர்களுக்கு முக்கிய அழைப்பு விடுத்துள்ளது. அதில் லாரி ஓட்டுனர்கள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எண்ணெய் நிறுவனங்களிடம் புகார் அளித்ததால், சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெட்ரோல் நிலையங்களுக்கு எரிபொருள் கொண்டு செல்வது சிக்கல் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட நேரம் வரிசையில் இருந்து பெட்ரோல் போட்டுக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரபல செய்தி நிறுவனத்திற்கு பிரித்தானியா நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் “பிரித்தானியாவில் நிறைய எரிபொருள் உள்ளது. எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை. ஆகையால் மக்கள் இயல்பாக நடந்து கொள்ள வேண்டும். மேலும் மக்கள் தங்கள் கார்களில் வழக்கம்போல் பெட்ரோல் போட்டால் வரிசையில் நிற்க வேண்டாம். பெட்ரோல் நிலையங்களிலும் பற்றாக்குறை ஏற்படாது. எரிபொருள் தொடர்பான இந்த செய்தி திட்டமிட்டு செய்த செயல். இதற்கு hauliers சங்கம் தான் காரணம். குறிப்பாக பிரித்தானியர்களின் சம்பளத்தை குறைப்பதற்காக அதிகமான ஐரோப்பிய ஓட்டுனர்களை கொண்டிருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்” என்று அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் கூறியுள்ளார்.