Categories
அரசியல் மாநில செய்திகள்

பதறும் எடப்பாடி…! ”500 பவுன் மோசடி” எல்லாமே அதிமுகவினர்…! ஷாக் கொடுத்த அமைச்சர் …!!

தஞ்சை மாவட்ட கூட்டுறவு வங்கியில் 500பவுன் நகைக்கடன் மோசடி நடந்துள்ளது என அமைச்சர் சொல்லியது அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த அதிமுக ஆட்சியில் நடந்து இருக்க கூடிய  கூட்டுறவு சங்கங்க முறைகேடுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தான் பயன் பெற்றிருக்கிறார்கள் என்று அப்பட்டமான பொய்யை சொல்லி இருக்கிறார். என்ன வேடிக்கை என்றால் ? கூட்டுறவு சங்கங்களில் அவர்கள் முறைகேடாக தேர்தலை நடத்தி, அந்த முறைகேடான தேர்தல் வாயிலாக வந்திருக்கக்கூடிய கூட்டுறவு சங்கத் தலைவர்கள் அத்தனை பேருமே இன்றைக்கு அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.

அப்படி அதிமுகவை சார்ந்து இருக்கக்கூடிய கூட்டுறவு சங்க தலைவர்களையெல்லாம் கையில் வைத்துக் கொண்டு அவர்களோடு நகை கடன்களில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதை  கூட்டுறவுத்துறை அமைச்சர் விவரமாகச் சொல்லி இருக்கிறார். ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பலபேர், பல இடங்களில், பல ஊர்களில், பல்வேறு வங்கிளுக்கு சென்று கடன்களை பெற்றிருக்கிறார்கள்.

இந்த முறைகேடுகளெக்கெல்லாம் யார் துணை போயிருக்கிறார்கள் என்று பார்த்தால் அதிமுகவின் கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள். இவர்கள் இந்த முறைகேடுகளுக்கு அங்கே இருக்க கூடிய அதிமுகவினரை வைத்துக்கொண்டு  ஈடுபட்டதன் விளைவாக…. இந்த நகை கடன் எல்லாம் சரியாக வழங்கப்பட்டிருக்கின்றதா ? கஷ்டத்திற்காக கூட்டுறவு வங்கியில் நகை கடன் வைத்திருக்கும்  உண்மையான ஏழை விவசாயிகளுக்கு மட்டும் வழங்க வேண்டும் என முதல்வர் சொன்ன காரணத்தால் எடப்பாடி பழனிச்சாமி மடியிலே மொத்த கனத்தையும் வைத்துக் கொண்டிருப்பதால் பதறிப்போய் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

தஞ்சை மாவட்டத்திலே சுவாமிமலையில் இருக்கக்கூடிய ஒரு கூட்டுறவு வங்கி. அதனுடைய தலைவராக அதிமுகவை சேர்ந்தவர் தான் இருக்கின்றார். ஏறத்தாழ 500பவுனுக்கு மேலாக மோசடி நடைபெற்று இருக்கிறது என்பதை அவர்களே கண்டு பிடித்திருக்கிறார்கள். இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல இதைச் சொல்லி இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இருக்க கூடிய கூட்டுறவு சங்கங்களிலே அவர்கள்தான் தலைவராக இருக்கிறார்கள். நடந்து இருக்க கூடிய முறைகேடுகள் முற்றிலுமாக அதிமுக கூட்டுறவு சங்கத் தலைவர்களுடைய ஒத்துழைப்போடு தான் இவையெல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது.

எனவே எங்கெல்லாம் நடந்திருக்கிறது என்பதை முழு அளவிலே பட்டியல் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை கூட்டுறவுத்துறை அமைச்சரும் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே இந்த விவரங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டு மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்தோடு உரிய நடவடிக்கை…. உரிய நேரத்தில் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |