Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் தவறில்லை… அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

தடுப்பூசி போட அரசு கட்டாயப் படுத்தினால் தவறில்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி தடுப்பூசி தான் என்று, அதை கையில் எடுத்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.. தமிழகத்திலும் விறுவிறுப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகின்றது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட முதல் மாபெரும் தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கூடுதலாகவே 28,91,21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.. இரண்டாவதாக செப்டம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்ட முகாமில் 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கை விடவும் கூடுதலாக 16,43,879 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று (ஞாயிறு) தமிழகம் முழுவதும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.. 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்று வரும் இந்த மெகா முகாமில் 4.45 மணி நிலவரப்படி 19.77 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியளித்தார்.. அப்போது அவர் கூறுகையில்,  தடுப்பூசி போட அரசு கட்டாயப் படுத்தினால் அது தவறில்லை.  மக்கள் நோயின்றி வாழ தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்..

Categories

Tech |