Categories
மாநில செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம்…. இன்று 22.08 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

இன்று மெகா தடுப்பூசி முகாம் மூலம் 22.8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவ செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கூடுதலாகவே 28,91,21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.. இரண்டாவதாக செப்டம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்ட முகாமில் 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் இலக்கை விடவும் கூடுதலாக 16,43,879 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஞாயிறு) தமிழகம் முழுவதும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.. 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற இந்த மெகா முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.. ஆனால் இந்த இலக்கு மதியமே எட்டப்பட்டு விட்டது.. 4 மணியளவில் இலக்கை விஞ்சி 18.14 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டிருந்தது..

இந்த நிலையில் சென்னையில் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.. அப்போது அவர், மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் வெற்றிகரமாக நடந்துள்ளது. தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 22.08 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முகாமில் தடுப்பூசி முதல் தவணை 13.35 லட்சம் பேரும், இரண்டாம் தவணை 8.72 லட்சம் பேரும் செலுத்தியுள்ளனர். அக்டோபருக்குள் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்..

Categories

Tech |