Categories
உலக செய்திகள்

அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு…. தகவல் வெளியிட்ட நில அதிர்வு மையம்….!!

தைவான் நாட்டில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

தைவான் நாட்டில் உள்ள ஹூவாலியன் கவுண்டியின் வடகிழக்கு பகுதியில் 39 கிலோமீட்டர் தூரத்தில் நேற்று அதிகாலை 3.50 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 46.8 கிலோமீட்டரில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்தவித தகவல்களும் இன்னும் வெளிவரவில்லை.

Categories

Tech |