அடுத்தடுத்து 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 116 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழசெவல் நயினார்குளம் பகுதியில் வசிக்கும் சங்கர சுப்பிரமணியன் கோபாலசமுத்திரம் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் ஆகிய 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து தலை துண்டித்து கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 18 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். இதனையடுத்து இந்த கொலை தொடர்பான வழக்கில் மற்ற சிலரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் குற்றங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 379 பேர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதில் 172 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 278 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அதில் 116 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு 162 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.