மாநாடு படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் கடைசியாக ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் மஹா, பத்து தல, மாநாடு, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வருகிற தீபாவளி அன்று தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Tomorrow date solliralam https://t.co/kH8vRr3AtN
— sureshkamatchi (@sureshkamatchi) September 26, 2021
சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் டுவிட்டரில் ரசிகர் ஒருவர் ‘மாநாடு படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும்’ என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சுரேஷ் காமாட்சி நாளை டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.