Categories
அரசியல்

கடந்த அதிமுக ஆட்சி சுத்த வேஸ்ட்…. ஆனா நம்ம தளபதி…. அப்பப்பா…. கனிமொழி பெருமிதம்…!!!

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரம் ஒன்றிய திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் பழனி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக மகளிர் அணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி எம்பி வேட்பாளர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனைவரும் போற்றும் வகையில் திமுக ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாத நிலையில், ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களில் ஏராளமான வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிறைவேற்றி வருவதாக கனிமொழி எம்பி பெருமிதத்துடன் எடுத்துரைத்தார்.

அதில் அவர் “தலைவர் கலைஞர் அவர்களுடைய வாக்குறுதியை, தலைவர் கலைஞர் அவர்களுடைய கனவை இன்று நிறைவேற்றி தந்து விவசாயத்துக்கென்று தனி பட்ஜெட்டை போட்டு காட்டியிருக்கக்கூடிய முதலமைச்சர் தளபதி அவர்கள். ஒவ்வொரு நாளும் ஒரு சாதனை நாளாக நம்முடைய ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனால் நாம் தைரியமாக தலையை நிமிர்த்தி மக்களிடம் வாக்கு கேட்க முடியும். நமக்கு, நம் ஊருக்கு, நம் சாதாரண சாமானிய மக்களுக்கு நம்முடைய கோரிக்கைகளை எல்லாம் நிறைவேறி, அவர்கள் போடுகின்ற திட்டம் எல்லாம் வீட்டுக்கு வந்து சேர வேண்டுமென்றால் இந்த  தேர்தலிலே வெற்றி பெற்றாக வேண்டும்” என்று பேசினார்.

Categories

Tech |