குடும்ப நலனுக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் கன்னிராசி அன்பர்களே.!! இன்று உங்கள் நண்பரிடம் சொந்த விஷயத்தைப் பற்றி பேசுவீர்கள். இதனால் கொஞ்சம் மனம் நிம்மதி அடைவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அனுகூல காரணி பலம்பெரும். உபரி பண வருமானத்தில் வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். அதனால் நன்மையும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் அறிவுத்திறன் கூடும். ஆனால் அவர்களது உடல் நலத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். முயற்சிகள் நல்ல பலனைக் கொடுக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். மேலதிகாரிகளின் உதவிகளும் ஆலோசனையும் உங்களை நல்வழிப்படுத்தும். இன்று உத்தியோகத்தில் உழைப்பு கூடும். லாபம் சிறப்பாகவே இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியரின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது பச்சை நிற ஆடையோ அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே பதினெட்டு சித்தர்கள் ஒருசேர உள்ள புகைப்படத்தை வணங்கி வருவது மிகவும் சிறப்பு. சித்தர்கள் வழிபாடு இன்று உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்