மசாஜ் செய்யச் சென்ற இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த மசாஜ் சென்டரின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்
தட்சிண கன்னடா மாவட்டம் கடப்பா அருகே சினேகா ஆயுர்வேதிக் பஞ்சகர்மா என்ற பெயரில் மசாஜ் சென்டர் அமைந்துள்ளது. இந்த சென்டரை கேரள மாநிலம் வயநாடு சேர்ந்த ஆபிரகாம் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி இளம்பெண் ஒருவர் அந்த மசாஜ் சென்டருக்கு மசாஜ் செய்ய சென்றுள்ளார் .அப்போது அதன் உரிமையாளர் ஆபிரகாம் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதற்கு அந்த இளம்பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே ஆபிரகாம் அந்த இளம்பெண்ணை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த இளம் பெண் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அதன் உரிமையாளரான ஆபிரகாமை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.