தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. அதில் முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 50% சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
அதே சமயம மேலும் பள்ளிகளுக்கு செல்ல பெற்றோரின் ஒப்புதல் கடிதம் அவசியமானது. யாரையும் வற்புறுத்த கூடாது. அதேநேரம் ஆன்லைன் மூலமாக கற்பித்தல் விஷயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது . பள்ளிகள் திறந்த இரண்டு வாரங்களுக்குள் சில பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தொற்று ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்தார்கள். சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கிருமிநாசினி கொண்டு தூய்மை பணிகள் நடைபெற்றது.
மேலும் கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் சில நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இப்போது நோய்த்தொற்று பரவல் இல்லாமல் இயல்பு நிலைக்கு வந்துள்ளதாக தெரிகின்றது. இதனைத் தொடர்ந்து தொடக்கப் பள்ளி,நடுநிலைப் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து படிப்பதற்காக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பள்ளிகள் திறப்பதில் அவசரம் வேண்டாம் என்று மாநில அரசு கூறுகிறது.
அதனால் சரியான நேரத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முதல்வர் முக ஸ்டாலின் தெரிவிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தொடக்கக் கல்வி இயக்ககம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதுதொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்கம் அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும் பெண்குழந்தைகளை பாதுகாப்பதற்கு குழுக்கள் அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் மாவட்ட சமூக நல அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர், பெண் காவல்துறை அலுவலர், பெண் மனநல மருத்துவர், போன்றோர் இடம் பெற வேண்டும். மேலும் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் பற்றி அமைக்க வேண்டும். மேலே கூறியுள்ள குழுக்களை சேர்ந்தவர்கள் வாரத்திற்கு ஒருமுறை பள்ளிகளுக்குச் சென்று புகார் பெட்டியை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார்கள் ஏதும் இருந்தால் அவற்றை காவல்துறையினருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து அனைத்துப்பள்ளிகளிலும் உள்ள அறிவிப்பு பலகைகளில் மகளிர் காவல் நிலையத்தின் தொடர்பு எண்கள் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.