அனைத்து கிராமங்களுக்கு சென்றடையும் வகையில் நலத்திட்டங்களானது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற ஐ.நா.சபையின் 76வது பொதுக் கூட்டத்தில் இந்தியா பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் அவர் உரையாற்றியதில் ” வீடு அல்லது நிலம் இல்லாதவர்களுக்கு அவற்றை அவர்களுக்கே சொந்தமாகும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தேசம் முழுவதும் ட்ரோன் மூலம் ஆறு லட்சம் கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு அவற்றை சீர்ப்படுத்துவதற்கான வேலைகள் தொடங்கப்படவுள்ளன. அதிலும் ஆளில்லா விமானங்கள் மூலம் நிலங்களை அளவு செய்து அவற்றை வறுமை கோட்டில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் நாட்டின் மூலையில் உள்ள அனைத்து கிராமங்கள் வரை சென்றடையும் விதமாக இந்தியா அரசு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவ காப்பீடு வசதி, வீடு போன்றவற்றை இந்தியா அரசு வழங்கவுள்ளது. இந்தியா நாட்டின் ஒரு சாதாரண வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூட ஐ.நா. சபையில் பங்கேற்று உரையாற்றுகிறார். அதிலும் இந்தியா நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் பெரும் இன்னல்களை சமாளித்துள்ளது. மேலும் பன்முகத்தன்மை என்பது சக்தி வாய்ந்த ஜனநாயகத்தின் அடித்தளம் ஆகும்.
குறிப்பாக உலகத்திற்கான தீவிரவாத செயல்களின் அச்சுறுத்தலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தின் முதல்வராகவும் இந்தியப் பிரதமராகவும் கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் வாழ்வில் ஈடுபட்டுள்ளேன். பன்முகத்தன்மையினால் இந்தியா உலகிற்கே முன்மாதிரியாக விளங்குகிறது. மேலும் உலக ஜனநாயகத்தின் முன்மாதிரியாக இருக்கும் இந்தியா தற்போது தனது 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளது. இறுதியாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பெரும் தொற்றினால் இந்தியாவில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.