Categories
தேசிய செய்திகள்

மக்கள் முதலாளி ஆகணும்…! பட்டியலிட்ட பேசிய மோடி…. வாயடைத்து போன ஐநா சபை …!!

ஐநாவில் பேசிய பிரதமர் மோடி ஏராளமான விஷயங்களை பட்டியலிட்டு பேசினார், இது ஐநா உறுப்பினர்கள் பலரையும் கவர்ந்தது.

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி ஐநாவில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உங்கள் அனைவருக்கும் நான் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் கௌரவபட வேண்டிய விஷயம். கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த உலகம் 100 வருடத்திற்கு முன் ஏற்பட்ட மிகப்பெரிய தொற்றை எதிர்கொண்டு இருக்கின்றது. நான் இதில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன்.

இந்தியா மக்களாட்சியின் தாயாக இருக்கிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்துள்ளது. பலவிதமான வேற்றுமைகளில் நாம் ஒற்றுமையை கண்டு கொண்டிருக்கிறோம். இந்தியா அப்படிப்பட்ட ஒரு நாடு. இதில் பலவிதமான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. இது மிகவும் வலிமை வாய்ந்த ஒரு மக்களாட்சி நாடாக இருக்கிறது.

இன்று நான் 4-வது முறையாக இந்திய பிரதமராக இங்கு உங்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறேன். கடந்த 7 வருடங்களாக இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்து மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு பாக்கியத்தை நான் பெற்றிருக்கிறேன். நான் என்னுடைய சுய அனுபவத்தில் உங்களுக்கு கூறுகிறேன். மக்களாட்சி முறை மிக சிறந்தது.

கடந்த 7 வருடங்களாக 43 கோடி மக்கள் வங்கியினுடைய நடைமுறைகளை தெரிந்து கொள்வதற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் வங்கியின் சேவையை பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு வங்கியின் மூலமாக காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 50 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவசமாக மருத்துவ வசதி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் மிகத் திறமையான, தரமான மருத்துவ வசதிகள், மேலும் தரமான வீடுகள் கட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. வீடு இல்லாதவர்களை வீட்டின் உரிமையாளர்களாக மாற்றி இருக்கிறோம். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் ஏழைகளுக்கு உண்டான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்யவேண்டும்.

இந்தியா இப்படிப்பட்ட ஒரு சவாலை திறமையாக கையாண்டு இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் சுத்தமான குடிநீர் வசதி செய்யப்பட்டிருக்கிறது. உலகத்திலுள்ள பல நிறுவனங்கள் இதை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். எந்த ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக்காகவும் அங்குள்ள மக்களுக்கு நிலம், வீடு அதற்கு உண்டான முதலாளி என்ற அங்கீகாரம் கிடைக்க வேண்டும். உலகத்தில் உள்ள பல பகுதிகளில் அப்படிப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நிலங்கள் மற்றும் வீட்டிற்கு உண்டான உரிமை அவர்களிடம் இல்லை. ஆனால் இந்தியாவில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் டிரோன் மூலமாக வரைபடங்களை உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு உண்டான நிலங்கள் அவர்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது. இது டிஜிட்டல் மூலமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என பிரதமர் மோடி இந்தியாவை பற்றி பட்டியலிட்டு பேசினார். அங்குள்ள பலரும் பிரதமர் மோடியின் பேச்சை உன்னிப்பாக கவனித்தனர்.

 

இந்தியா ரெடியா இருக்கு…. அறிவியலை நோக்கி வளர வேண்டும்…! உலக நாடுகளுக்கு மோடி அட்வைஸ்…!!

உலகத்தில் மிகப்பெரிய மக்களாட்சி உள்ள ஒரு நாடு தன்னுடைய உதவியை தன்னுடைய பங்களிப்பது தயாராக உள்ளது.

 

ஐநா சபையில் பேசிய பிரதமர் மோடி, மனித வாழ்வில் தொழில்நுட்பம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நீங்கள் அனைவரும்  அறிந்திருக்கிறீர்கள். தொழில்நுட்பம் மக்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும். பொறியாளர்கள், புதிய தொழில் முனைவோர்கள் எந்த நாட்டில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும், நம்முடைய மக்களாட்சி முறையினுடைய கருத்துகளை, சித்தாந்தங்களை மனதில் கொண்டு தங்களுடைய பணியை செய்ய வேண்டும். நான் இந்த கொரோனா சமயத்தில் பார்த்திருக்கிறேன்…  கொரோனா தொற்றுநோய் உலகத்திற்கு இந்த பாடத்தை கூட கற்றுக் கொடுத்திருக்கிறது.

உலகப் பொருளாதாரத்தை மேலும் நாம் பன்முகம் கொண்டு பார்க்க வேண்டும். நம்முடைய சுயசார்புள்ள இந்தியா இந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்திருக்கிறது. உலகளாவிய தொழில் புரட்சிக்கு இந்தியா  உலகத்தில் மிகப்பெரிய மக்களாட்சி உள்ள ஒரு நாடு தன்னுடைய உதவியை தன்னுடைய பங்களிப்பது தயாராக உள்ளது. இந்தியா பொருளாதார வளர்ச்சியிலும், சுற்றுப்புற சூழலிலும் மிக முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது.

சுற்றுப்புற சூழல் மாறுபாட்டை கருத்தில்கொண்டு இந்தியா செய்துள்ள முயற்சிகளில் நீங்கள் அனைவரும் தெரிந்து கருவப்படுவீர்கள். இந்தியா உலகத்திலேயே முதல் முறையாக பசுமை திட்டத்தை உருவாக்க முயற்சி செய்திருக்கிறது. வருங்கால சந்ததியினருக்கு நாம் பதிலளிக்க வேண்டும். எப்பொழுது தீர்மானம் எடுக்க கூடிய நேரம் வந்ததோ அப்போது உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய ஒரு வாய்ப்பு வந்தது,அதை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம்.

இன்று உலகத்திற்கு முன் ஒரு புதிய சிந்தனையை அளித்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் உலகம் முழுவதும் அறிவியலை ஆதாரமாகக் கொண்ட வளர்ச்சியை நாம் ஆதாரமாகக் கொண்டு செயல்பட வேண்டும். அறிவியல்பூர்வமான முயற்சிகளை எடுக்கும் போது பல அனுபவங்களை இந்தியா கற்றுக் கொண்டிருக்கிறது.

பலவிதமான சோதனை சாலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. நம்முடைய சுதந்திரம் பெற்று 75 வருடங்களான உற்சவத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தியா ஏறக்குறைய 75 சட்லைட் அனுப்புவதற்கு தயாராக இருக்கிறது. இவற்றை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்கள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

 

 

பயமில்லாமல் செல்லுங்கள்…. எந்த தயக்கமும் வேண்டாம்….  உலகிற்க்கே தத்துவம் சொன்ன மோடி …!!

ஆப்கானிஸ்தானின் நிலத்தை தீவிரவாதத்திற்கு நிலமாக மாற்ற கூடாது எனவும், நாம் இதைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

 

ஐநா சபையில் பேசிய பிரதமர் மோடி, புதிய சிந்தனைகளை ஒரு சிலர் தீவிரவாதத்தை ஒரு கருவியாகக் கொண்டு செயல்பட்டு இருக்கிறார்கள். இது அவர்களுக்கு மிகவும் அபாயகரமான விஷயம். ஆப்கானிஸ்தானின் நிலத்தை தீவிரவாதத்திற்கு நிலமாக மாற்ற கூடாது. நாம் இதைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எந்த ஒரு நாடும் தன்னுடைய சுயலாபத்திற்காக தீவிரவாதத்தை ஒரு கருவியாக உபயோகப்படுத்த கூடாது. இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அங்குள்ள பெண்களுக்கு, அங்குள்ள குழந்தைகளுக்கு, அங்குள்ள ஏழை மக்களுக்கு நம்முடைய உதவி தேவைப்படுகிறது. நாம் இப்பொழுது நம்முடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம்.

இதை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொரு விஷயத்தையும் சரியாக பயன்படுத்த வேண்டும். அதை தவறாக உபயோகப்படுத்தக் கூடாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். உலக நாடுகள் முழுவதும் ஒன்று சேர்ந்து இதற்காக குரல் கொடுக்கவேண்டும்.  இந்தியாவினுடைய பாதுகாப்பு மட்டுமல்ல உலக நாடுகளின் பாதுகாப்பு பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

இந்தியாவின் மிகச்சிறந்த ”தந்திரவாதி சாணக்கியர்” கூறியிருக்கிறார், எப்பொழுது சரியான நேரத்தில், சரியான வேலையை செய்யப்படவில்யோ அந்த நேரமே அந்த காரியத்தியனுடைய வெற்றியை நிறுத்திவிடும். எனவே நாம் காலத்திற்கு ஏற்றார்போல் நம்முடைய காரியங்களை செயல்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகளுக்கு முன்னால் பல விதமான சவால்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட பல சவால்களை நாம் கொரோனா சமயத்திலும் பார்த்து இருக்கிறோம், தீவிரவாதத்தை பார்த்திருக்கிறோம்.

இப்போது ஆப்கானிஸ்தானுக்கு இந்த  தீவிரவாதத்தை நாம் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கொரோனா ஆரம்பமான நேரத்தில் அனைத்து நிறுவனங்களும் உலக மேலாண்மை பற்றி கருத்தில் கொண்டிருந்தன. இது அவசியமானது நாம் உலகளாவிய பாதிப்புகளை புரிந்துகொள்ள வேண்டும். நாம் தொடர்ச்சியாக இதற்காக முயற்சி செய்ய வேண்டும். நோபல் பரிசுபெற்ற ரவீந்திரநாத் தாகூர் அவருடைய வார்த்தைகளை கூறி நான் என்னுடைய பேச்சை முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தன்னுடைய நல்ல வேலைகளுக்காக பயமில்லாமல் நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள், எந்தவிதமான தயக்கமும் வேண்டாம், அனைத்து தடைகளும் விலகி விடும். இது இந்த சந்தர்ப்பத்தில் இந்த நேரத்தில் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் சரியான ஒரு தத்துவமாக இருக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நம் அனைவருடைய முயற்சியும் உலகத்தில் அமைதிநிலைநிறுத்தும். இந்த உலகத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் என பிரதமர் மோடி பேசினார்.

 

Categories

Tech |