அமெரிக்காவின் நைக் என்ற விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தால் தேவைப்படும் பொருட்களை விநியோகிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நைக் நிறுவனமானது, தேவைக்கு தகுந்த பொருட்களை விநியோகிக்க முடியாததால், இந்த ஆண்டிற்குரிய தங்களின் விற்பனை இலக்கை மாற்ற தீர்மானித்திருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக, பல நாடுகள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தியிருப்பதால் உற்பத்தி மற்றும் விநியோக சுழற்சி பாதிப்படைந்திருப்பதாக நைக் நிறுவனம் கூறியிருக்கிறது.
நைக் நிறுவனம் உற்பத்தி செய்யும் காலணிகளுக்கு சர்வதேச அளவில் அதிக வரவேற்பு உண்டு. இந்தோனேசியா மற்றும் வியட்நாமில் இருக்கும் தொழிற்சாலைகளில் நைக் நிறுவனத்தின் காலணிகள் 75% தயாரிக்கப்படுகிறது.
ஆனால் அங்கு நடைமுறைப்படுத்தியிருந்த கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த வருடத்தில் மட்டும் 10 வாரங்களுக்கு உற்பத்தி பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் உற்பத்தி செய்த பொருட்களை ஐரோப்பா போன்ற பகுதிகளுக்கு விநியோகிக்கக்கூடிய நேரம் அதிகரித்திருப்பதாக இந்நிறுவனம் கூறியிருக்கிறது.