ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன், ஹிந்தி விண்ணப்பதாரர்களை திருப்பி அனுப்பவும், தெற்கு ரயில்வேயின் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை அந்த உதவி ஓட்டுனர் காலியிடங்களில் நிரப்பக்கோரி கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் குறிப்பிட்டுருந்ததாவது,”உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு ரயில்வே வாரியமும், தெற்கு ரயில்வேயில் 761 உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தது. இதற்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒன்றிற்கு தான் விண்ணப்பிக்கவும், எந்த மொழியிலும் எழுதலாம் எனவும், எந்த வாரியத்திற்கு தேர்வு எழுதினார்களோ அங்குதான் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கோரக்பூர் ரயில்வே துறையில் தேர்வானவர்களை தெற்கு ரயில்வேயில் அமர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த செயலானது தெற்கு ரயில்வே விண்ணப்பதாரர்களின் பணியை பறிக்கும் செயலாகும். மேலும் சட்ட விரோத செயலாகும். தற்பொழுது ஹிந்தியில் தேர்வு எழுதியவர்கள் தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பிரிவில் விண்ணப்பித்தவர்களாக உள்ளனர்.
இந்தியில் தேர்வு எழுதியவர்கள் உதவி ஓட்டுநர் பதவிக்கு 13% பேர் தேர்வாகியுள்ளது போன்ற தகவலை எனக்கு ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே இதுபோன்ற ஜனநாயக அமைப்பை சீர்குலைக்கும் செயலை உடனடியாக தலையிட்டு தெற்கு ரயில்வே பணியிடங்களுக்கு தெற்கு ரயில்வே விண்ணப்பதாரர்களையே நியமிக்க கோரி ரயில்வே துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுகின்றேன்” என குறிப்பிட்டுருந்தார்.