அஸ்வின் நடிப்பில் வெளியான குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் யூடியூபில் 125 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இவர் ஓகே கண்மணி, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகராக நடித்திருந்தார். தற்போது இவர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் குட்டி பட்டாஸ், லோனர், கிரிமினல் கிரஷ் போன்ற ஆல்பம் பாடல்களிலும் அஸ்வின் நடித்திருந்தார்.
1 2 5 M 🔥🧡 https://t.co/re1REmRv69
— Ashwin Kumar (@i_amak) September 24, 2021
இதில் குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது . வெங்கி இயக்கியிருந்த இந்த பாடலில் அஸ்வினுக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடித்திருந்தார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்த இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். இந்நிலையில் குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் யூடியூபில் 125 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தல் சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.