மதுரை புதூர் பாஜக அலுவலகத்தில் தீனதயாள் உபத்யாயா பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் மூத்த அமைச்சர்கள் தங்களுடைய இலக்காக்களை பற்றி கவலைப்படாமல் செயல்பட்டு வருகின்றனர். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லாமல் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்கிறார். மானிய கோரிக்கையின் போது அமைச்சர்களுடைய அறிவிப்புகள் அனைத்தும் அதிகாரத்தை மீறியதாக உள்ளன.
ஒரு அரசு மதசார்பற்ற அரசாக இருக்கலாம். ஆனால் இந்து விரோத நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் ஏற்கனவே உள்ள நிலையில் திமுக அரசு வம்பு செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ள்ளது. அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலைத்துறை தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை நிறைவேற்றாமல் உதயநிதி ஸ்டாலின் பின்னால் செல்கிறார் என்று பேசியுள்ளார்.