Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு, பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வரும் போது, பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் முழுவதுமாக திறக்காதது குறித்து விமர்சனங்கள் எழுகின்றன. குழந்தைகள் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் கவனமாக இருக்கிறோம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |