மற்றவர்களின் துன்பத்தை தன் துன்பம் ஆக எடுத்துக் கொள்ளும் மீனராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்களில் கவனச் சிதறல்கள் ஏற்படக்கூடும். தொழில் வியாபாரம் சிறக்க கூடுதல் உழைப்பு மட்டுமே உதவும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். புத்திரரின் நல்ல செயல் மனதில் மகிழ்ச்சியை கொடுக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம். இன்று குறிக்கோளற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல் உடல் நலக்கேடு போன்றவை ஏற்படும். எனவே நீங்கள் எதையும் திட்டமிட்டு செய்வது மிகவும் நல்லது. மனதில் கவலை உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுபச்செலவுகள் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலனைக் கொடுக்கும்.
மாணவர்கள் கல்வியில் ஓரளவு முன்னேற்றம் பெற முடியும். இன்று கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். கல்வியில் ஆர்வத்தை செலுத்துங்கள். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு கல்வியில் இப்போது கவனத்தை செலுத்துவது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் இன்று பதினெட்டு சித்தர்கள் ஒன்று சேர உள்ள புகைப்படத்தை வழிபடுவது நல்லது. இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாக இருக்கும். இன்று சித்தர்களின் வழிபாடு உங்களை நல்வழிப்படுத்தும். வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றி அமைத்துக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்