Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் உச்சி மாநாடு…. கலந்து கொண்ட முக்கிய தலைவர்கள்…. இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை….!!

இந்தோ-பசிபிக் மண்டலத்தின் பாதுகாப்பு குறித்த அறிக்கை ஒன்றை நான்கு நாடுகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் உருவாக்கிய குவாட் என்னும் அமைப்பின் உச்சி மாநாடானது அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா  ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமரான யோஷிஹிடே சுகா போன்ற தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார். மேலும் அவர்கள் நால்வரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் “இந்தோ- பசிபிக் மண்டலத்திலும் அதற்கு அப்பாற்பட்டும் பாதுகாப்பு மற்றும் செழிப்பையும் வலுப்படுத்துவதற்காக உலக அளவில் உள்ள சட்டங்களின் விதிகளை வெளிப்படையாக ஆதரிக்கிறோம் என்று உறுதி அளிக்கிறோம்.

மேலும் பிற நாடுகளின் எல்லைகளை மதிப்பது, ஜனநாயகக் கொள்கைகளை போற்றுவது, பிரச்சினைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காண்பது, கடலில் கப்பல்களும் வானில் விமானங்களும் எந்தவித தடையுமின்றி செல்வது சட்டத்தின் ஆட்சியை கடைப்பிடிப்பது போன்றவற்றில் உறுதியாக இருக்கிறோம். மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ அமைப்புக்கு  எங்களது ஆதரவை தெரிவிக்கிறோம். அதனுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். குறிப்பாக பெரும் தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் பகிர்ந்துள்ளோம்.

அதிலும் இந்தோ-பசிபிக் மண்டலத்தில் உள்ள நாடுகளின் சுகாதார பாதுகாப்புக்காக குவாட் அமைப்பின் நாடுகள் சேர்ந்து தடுப்பூசி நிபுணர்கள் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது. அதில் இருக்கும் மருத்துவ வல்லுனர்கள் ஒவ்வொரு நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தோ- பசுபிக் மண்டலத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக 7.9 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து உலக நாடுகளுக்கும் 120 கோடி தடுப்பூசிகள் வழங்குவதகாக உறுதியளிக்கப்பட்டுள்ளது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தென் சீனா கடல் பகுதியில் தைவான், மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ்,மலேசியா போன்ற நாடுகள் உரிமை கேட்டு போராடி வருகின்றனர். இதற்கிடையில் சீனா அப்பகுதியில் தனது ராணுவ பலத்தை நிலைநாட்டி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனை இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தடுப்பதற்காக முயற்சி செய்து வருகின்றனர். மேலும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் மண்டலத்தை உருவாக்கும் முயற்சியில் குவாட் அமைப்பானது ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |