Categories
உலக செய்திகள்

ரோந்து பணியில் இருந்த வாகனம்…. குண்டு வீசிய ராணுவ அமைப்பு…. 4 வீரர்கள் உயிரிழப்பு….!!

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு வீசியதில் நான்கு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தானில் ஹர்னாய் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள கோஸ்ட் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. அப்போது  அந்த வாகனமானது சபர் பாஷ் பகுதியின் அருகே சென்ற போது பலம் வாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். குறிப்பாக இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலை ராணுவம் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Categories

Tech |