இன்றைய தின நிகழ்வுகள்
1529 – உதுமானியப் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டார்.
1540 – இயேசு சபைக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் தந்தார்.
1590 – திருத்தந்தை ஏழாம் அர்பன் பதவியேற்ற 13-ஆம் நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர்.
1605 – கிர்க்கோல்ம் நகரில் இடம்பெற்ற போரில் சுவீடன் இராணுவத்தை போலந்து-லித்துவேனிய இராணுவம் தோற்கடித்தது.
1777 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகளின் முற்றுகையைத் தவிர்க்கும் பொருட்டு, பென்சில்வேனியாவின் லான்காஸ்டர் நகரம் இந்த ஒரு நாள் மட்டும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக இருந்தது.
1791 – யூதர்களுக்கு முழுமையான குடியுரிமை வழங்குவதற்கு பிரான்சின் நாடாளுமன்றம் வாக்களித்தது.
1822 – ரொசெட்டாக் கல் சான்-பிரான்சுவா காம்போலியன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.
1825 – உலகின் முதலாவது பயணிகள் நீராவித் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.
1854 – “ஆர்க்டிக்” நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.
1893 – சிகாகோவில் இடம்பெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்ற மாநாடு முடிவடைந்தது.
1916 – எதியோப்பியாவில் இடம்பெற்ற அரண்மனைப் புரட்சியை அடுத்து ஐந்தாம் இயாசு மன்னர் பதவியை இழந்தார்.
1922 – முதலாம் கான்ஸ்டன்டைன் கிரேக்க மன்னர் பதவியில் இருந்து முடி துறந்தார். அவரது மூத்தமகன் இரண்டாம் ஜார்ஜ் மன்னராக முடி சூடினான்.
1928 – ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது.
1938 – குயீன் எலிசபெத் பயணிகள் கப்பல் கிளாஸ்கோவில் இருந்து தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனி, சப்பான், இத்தாலி ஆகியன முத்தரப்பு உடன்பாட்டில் பெர்லின் நகரில் கையெழுத்திட்டன.
1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் கெசெல் நகர் மீது கூட்டுப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய தாக்குதல் ஆகும்.
1947 – தென்னிந்தியத் திருச்சபை சென்னையில் நிறுவப்பட்டது.
1949 – சேங் லியோன்சாங் சீனாவின் கொடியை வடிவமைத்தார்.
1956 – அமெரிக்க வான்படைக் கப்டன் மில்பேர்ன் ஆப்ட் மக் 3 ஐத் தாண்டிய முதல் நபர் என்ற பெயரைப் பெற்றார். சிறிது நேரத்தின் பின்னர் விமானம் கட்டுக்கடங்காமல் வீழ்ந்து நொறுங்கியதில் அவர் கொல்லப்பட்டார்.
1959 – சப்பான், ஒன்சூ தீவில் இடம்பெற்ற சூறாவளியில் 5,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1962 – யெமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது.
1964 – ஜான் எஃப். கென்னடியை லீ ஹாவி ஒசுவால்ட் என்பவன் வேறு எவரினதும் தூண்டுதல் இன்றிக் கொலை செய்ததாக வாரன் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
1975 – எசுப்பானியாவில் கடைசி மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. போராளிக் குழுவைச் சேர்ந்த ஐவர் தூக்கிலிடப்பட்டனர். உலகெங்கும் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
1977 – சப்பான் ஏர்லைன்சு வானூர்தி மலேசியா, சுபாங் நகரில் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 79 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.[1]
1983 – ரிச்சர்ட் ஸ்டால்மன் குனூ செயற்றிட்டத்தை அறிவித்தார்.
1993 – அப்காசியாவில் சுகுமியில் ஜார்ஜியப் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
1994 – மியான்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்க்க மக்களாட்சிக்கான தேசிய அமைப்பை ஆங் சான் சூச்சி உருவாக்கினார்.
1996 – ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி அரசுத்தலைவர் புரானுதீன் ரபானியை ஆட்சியிலிருந்து விரட்டினர். முன்னாள் அரசுத்தலைவர் முகமது நஜிபுல்லா காபூல் நகர மின்சாரக் கம்பத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1998 – கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளினால் ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.
1998 – கூகுள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது.
2001 – சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2002 – கிழக்குத் தீமோர் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.
2007 – நாசா டோன் விண்கலத்தை சிறுகோள் பட்டையை நோக்கி ஏவியது.
2008 – இந்தியாவின் தலைநகர் தில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டு 25 பேர் காயமடைந்தனர்.
2008 – சீன விண்வெளி வீரர் சாய் சிகாங்க் விண்வெளியில் நடந்த முதலாவது சீனர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
2014 – சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் செயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.
இன்றைய தின பிறப்புகள்
1722 – சாமுவேல் ஆடம்ஸ், அமெரிக்க அரசியல் அறிஞர் (இ. 1803)
1814 – டானியல் கிர்க்வுட், அமெரிக்க வானியலாளர் (இ. 1895)
1824 – பெஞ்சமின் ஆப்தார்ப் கவுல்டு, அமெரிக்க வானியலாளர் (இ. 1896)
1905 – சி. பா. ஆதித்தனார், தினத்தந்தி தமிழ் நாளிதழ் நிறுவனர் (இ. 1981)
1918 – மார்ட்டின் இரைல், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வானியலாளர் (இ. 1984)
1924 – தேவன் யாழ்ப்பாணம், ஈழத்து எழுத்தாளர் (இ. 1982)
1925 – ராபர்ட் எட்வர்ட்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (இ. 2013)
1926 – ஜி. வரலட்சுமி, தென்னிந்திய நடிகை, பாடகி (இ. 2006)
1929 – புகழேந்தி, தென்னிந்தியத் திரைப்பட இசை அமைப்பாளர் (இ. 2005)
1932 – ஒலிவர் வில்லியம்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
1932 – யஷ் சோப்ரா, பாக்கித்தானி-இந்திய இயக்குநர் (இ. 2012)
1933 – நாகேஷ், நகைச்சுவை நடிகர் (இ. 2009)
1953 – அம்ருதானந்தமயி, இந்திய குரு, ஞானி
1957 – லீலாவதி, தமிழக இடதுசாரி அரசியல்வாதி (இ. 1997)
1965 – சுதா சந்திரன், இந்திய பரதநாட்டியக் கலைஞர், நடிகை
1972 – கிவ்வினெத் பேல்ட்ரோ, அமெரிக்க நடிகை, தொழிலதிபர்
1981 – லட்சுமிபதி பாலாஜி, இந்தியத் துடுப்பாளர்
1981 – பிரண்டன் மெக்கல்லம், நியூசிலாந்து துடுப்பாளர்
1982 – லில் வெய்ன், அமெரிக்க ராப் இசைக் கலைஞர், நடிகர்
1984 – காயத்ரி ஜெயராமன், இந்தியத் திரைப்பட நடிகை
1988 – சந்தியா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இன்றைய தின இறப்புகள்
1660 – வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சு புனிதர் (பி. 1581)
1833 – இராசாராம் மோகன் ராய், இந்திய சீர்திருத்தவாதி (பி. 1772)
1933 – காமினி ராய், வங்காளக் கவிஞர், பெண்ணியவாதி (பி. 1864)
1972 – சீர்காழி இரா. அரங்கநாதன், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1892)
1975 – டி. ஆர். சேஷாத்ரி, தமிழக வேதியலறிஞர் (பி. 1900)
1996 – முகமது நஜிபுல்லா, ஆப்கானித்தானின் 7வது அரசுத்தலைவர் (பி. 1947)
2000 – அ. மாற்கு, ஈழத்து ஓவியர் (பி. 1933)
2008 – மகேந்திர கபூர், இந்தியப் பாடகர் (பி. 1934)
2011 – வில்சன் கிரேட்பாட்ச், செயற்கையாக உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கியைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியாளர் (பி. 1919)
2015 – பிராங்க் டைசன், ஆங்கிலேய-ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1930)
2017 – இயூ எஃப்னர், அமெரிக்கப் பதிப்பாளர், தொழிலதிபர் (பி. 1926)
இன்றைய தின சிறப்பு நாள்
விடுதலை நாள், (துருக்மெனிஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)