காதல் திருமணம் செய்த மனைவி, கள்ளக்காதலுடன் ஓடியதால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜயபுரா மாவட்டம் தாலிக்கொட்டி தாலுகா பொம்மனகள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரும் அதே பகுதியை சேர்ந்த சோபனா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேஷின் வீட்டின் அருகே அவருடைய சகோதரரின் உறவினரான ஸ்ரீசைல் என்பவர் குடி வந்தார். ஸ்ரீசைல் ஷோபனாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது
இந்த விவகாரம் பற்றி வெங்கடேஷுக்கு தெரியவரவே அவர் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார். ஆனால் இதனை பொருட்படுத்தாத சோபனா மற்றும் ஸ்ரீசைல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீ சைல் மற்றும் ஷோபனா இருவரும் திடீரென்று மாயமானார். இருவரும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதன்பின் இருவரும் வீட்டைவிட்டு ஓடியது தெரிய வந்தது. இதனால் வெங்கடேஷ் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் காதல் மனைவி தன்னை விட்டு சென்று விட்டால், என்ற விரக்தியில் வெங்கடேஷ் நேற்று முன்தினம் தனது முகநூல் பக்கத்தில் என் மனைவி என்னை விட்டு சென்று விட்டாள். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என்னுடைய தற்கொலை ஸ்ரீ சைல் தான் காரணம் என்று வீடியோ பதிவிட்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் உடனடியாக வீட்டிற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் வெங்கடேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் அவரை மீட்டு தீவிர சிகிச்சை வார்டில் அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.