எக் ரைஸ் வாங்கி தருவதாகக் கூறி அழைத்துச் சென்று, ஆதரவற்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தார்வார் மாவட்டம் அண்ணிகெரி கிராமத்தை சேர்ந்தவர் சரணப்பா (21).இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு ஆதரவற்ற பிச்சைக்கார சிறுமி சரணப்பாவிடம் பிச்சை கேட்டுள்ளார் . அப்போது அவர் அந்த சிறுமிக்கு எக்ரைஸ் கொடுப்பதாக கூறி தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் சிறுமியை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். ஆனாலும் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சிறுமிக்கு தார்வார் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தனர் அப்போது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் தார்வார் புறநகர் போலீசார் சரணப்பாவை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து உள்ளனர் .மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.