Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! தடுமாற்றம் ஏற்படும்….! கவனம் வேண்டும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! எதையும் யோசித்து செய்தால் எல்லாம் நல்லதாக நடக்கும்.

இன்று ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதங்கள் ஏற்படும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்ல வேண்டும். இன்று முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில காரியங்களை நீங்கள் கவனமாக செய்ய வேண்டும். காரியங்களை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்க வேண்டும். சில இடங்களில் உங்களுக்கு தடுமாற்றம் ஏற்படும். தாமதம் இருக்கும். பயணங்கள் எண்ணற்ற மாற்றத்தை ஏற்படுத்தும். பயணங்கள் செல்வதாக இருந்தால் உடமைகள் மீது கவனம் கொள்ள வேண்டும். மனதில் ஒருவித சந்தோஷம் இருக்கும். வீண் அலைச்சல், காரியத்தடை, மன குழப்பம் எல்லாம் சரியாகும். கவனமாக எதிலும் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். இன்று வீட்டை விட்டு வெளியே தங்குவதற்கான சூழல் இருக்கும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்தால் எல்லாம் நல்ல விதமாக நடக்கும்.

செல்வம் சேரும். செல்வாக்கு கூடும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். சாமர்த்தியமாக செயல்பட வேண்டும். நல்ல எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையை கண்டிப்பாக முன்னேற்றமடைய செய்யும். திருமணத் தடைகள் இருக்கும். அதனை நீங்கள் முறியடித்து தான் வெற்றி கொள்ள வேண்டும். பொறுமையாக இருந்து எதையும் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் நட்பு பாராட்டுவார்கள். மாணவர்களுக்கு மேற் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொகுசான வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டு கொள்வீர்கள். காதல் விவகாரங்கள் வெற்றியை கொடுக்கும். சில நேரங்களில் மன குழப்பத்தை கொடுக்கும். காதலை நீங்கள் சரிவர புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் தான் முடிவு எடுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 5                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: இளம் சிவப்பு மற்றும் பச்சை

Categories

Tech |