விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வரும் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் ரோஷினி கண்ணம்மாவாக பலரது மனதில் இடம்பிடித்துள்ளார். இவர் மாடல் என்பதால் அவ்வபோது சமூக வலைத்தளத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்நிலையில் தற்போது அம்மன் ரூபத்தில் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் பாரதிகண்ணம்மா சீரியலுக்காக எடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவில்லை. ஆனால் இதனை பார்த்த ரசிகர்கள் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.