இருக்கும் கோவிலை முழுமையாக பராமரிக்கும் வரை புதிய கோவிலை தொடமாட்டேம் என சத்தியம் செய்யவேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, கோவிலை அழிப்பது தான் இவர்களின் நோக்கம். தமிழகத்தில் 38,666 கோவில்கள் இருக்கிறது, கோவில்களும், திரு மடங்களின் கோவில்களும் என்று கொள்கை விளக்கக் குறிப்பில் சொல்லியிருக்கிறார். அத்தனையும் செயல்பட்டு வரும் கோவில்களா இருக்கா ? ஏனென்றால் நீங்கள் எடுக்கும் போது அது செயல்படும் கோவிலாக இருக்கும். செயல்பாடு உடைய பூஜை நடக்குற கோவில் உண்டியல் இருந்தது, காசு விழுந்தது….
அப்போ குறைந்தபட்சம் அந்த கோவிலை அந்த நிலையிலேயே பராமரிக்கனுமா ? வேண்டாமா. இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளது. இங்கே ஏழைகாத்தஅம்மன் கோவில் வெள்ளலூர்ல நேத்து போயிருக்காங்க. மக்களை அடித்து விரட்டி இருக்கிறார்கள். அவர்கள் காலில் விழுந்து கும்பிட்டு கொள்கிறேன். இந்து சமுதாயம் எந்திரிக்க ஆரம்பித்திருக்கிறது.
சென்னையில் 15 நாட்களுக்கு முன்னாடி மயிலாப்பூரில் ஆதிகேசவபெருமாள் கோவில் இடத்தை கையகப்படுத்தினார்கள். திருப்ப அந்த தர்மகர்த்தாவை நீதிமன்றம் ரி-இன்ஸ்டிட் பண்ணிருக்கு. உங்களுக்கு ஏற்கனவே எடுத்திருக்கிற கோவில்களை பராமரிக்காமல் எதற்கு புதுகோவிலை எடுத்துக்குறீங்க. ஆகவே தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
நாங்கள் இந்த 38,666 கோவில்களையும் வழிபடும் கோவிலாக புனருதாரணம் செய்கின்ற வரை இனிமேல் புதிய கோவிலை தொட மாட்டோம் என சத்தியம் செய்கிறேன் என முதலமைச்சரும், சேகர் பாபுவும் சொல்ல வேண்டும். இல்லையெனில் பல்லாயிரக்கணக்கில் வீதியில் திரளுவோம் ஹிந்து மதத்தை காப்பாற்றுவதற்காக, ஹிந்து கோவில்களை காப்பாற்றுவதற்காக என ஹெச்.ராஜா கூறினார்.