Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் …. ‘கிங்’ கோலி இமாலய சாதனை ….! கொண்டாடும் ரசிகர்கள் ….!!!

டி20 கிரிக்கெட்டில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி 10 ஆயிரம் ரன்கள் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார் .

14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 39-வது லீக் ஆட்டத்தில்  விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ,ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த  பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 51 ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் விராட் கோலி 13-வது ரன்னை கடந்தபோது டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

அதோடு 10 ஆயிரம் ரன்களை கடந்த சர்வதேச வீரர்களின் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார். இதுவரை 314 போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி 5 சதம் ,74 அரைசதம் உட்பட  10,038 ரன்கள் குவித்துள்ளார் .இதற்கு முன்னதாக வெஸ்ட்இண்டீஸில்  அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 14, 275 ரன்னும் ,பொலார்ட் 11,195 ரன்னும், டேவிட் வார்னர் 10,019 ரன்னும் , பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் 10,808 ரன்னும் எடுத்துள்ளனர் தற்போது இந்தப் பட்டியலில் விராட் கோலி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Categories

Tech |