தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பாமக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகிய 3 கட்சிகளும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. திமுக கூட்டணி கட்சிகள் அந்த கூட்டணியிலேயே தொடர்கிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களை மிரட்டுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், “என்னை மையப்படுத்தி தான் இனி அரசியல் சுத்தும். உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் பெண் வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள். ஆட்களை கடத்துகிறார்கள். அவர்களால் நாங்கள் தலைமறைவாக இருக்கிறோம். தேர்தலில் விலகியிருந்தால் பணமும், அரசு வேலையும் தருவதாக கூறி மிரட்டுகிறார்கள் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.