Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் VS ராஜஸ்தான் ராயல்ஸ் …. இன்று மோதல் ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன .

14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 8 தோல்வி , ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை இருந்தது.

அதேபோல் 9 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி4-வெற்றி ,5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டி ராஜஸ்தான் அணிக்கு முக்கியமானதாகும்.இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று  வாய்ப்புக்கான நெருக்கடி குறையும் .இதற்கு முன்பு இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய நேரப்படி இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது .

Categories

Tech |