அமெரிக்காவில் போலியாக போடப்பட்டுள்ள பேய் வீடு ஒன்றில் பணிபுரிந்த நபரொருவர் விதியை மீறி வைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டு அங்கு வந்த சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள ஒஹாயோ என்னும் மாவட்டத்தில் பொழுதுபோக்கிற்காக போலியான பேய் வீடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்டுள்ள அந்த வீட்டில் பணிபுரியும் மாறுவேடம் அணிந்திருப்பவர்கள் உண்மையான ஆயுதத்தை வைத்திருக்கக்கூடாது என்பது அங்கு விதிமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் போலியான அந்த பேய் வீட்டில் பணிபுரியும் நபரொருவர் உண்மையான கத்தியை வைத்து அங்கு வந்த 11 வயது சிறுவனை காலில் குத்தியுள்ளார். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.